சென்னையில் விபத்து... தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் மின்சார ரயில் மோதி பலி
சென்னை: சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் பலியாகிவிட்டனர்.
கடற்கரையிலிருந்து தாம்பரம் நோக்கி மின்சார ரயில் ஒன்று எழும்பூரில் இருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் சேத்துப்பட்டு ரயில் நிலையம் வந்த போது இரண்டு பேர் அங்குள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.

அப்போது அவர்கள் மீது ரயில் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விசாரணையில் அவர்கள் சாஸ்திரி நகரை சேர்ந்த முனிவேல், கிஷோர்குமார் ஆகியோர் என தெரியவந்தது. இவர்களது உடல்கள் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது.
பொதுமக்கள் தண்டவாளத்தை கடக்காத வகையில் ரயில் நிலையங்களில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ரயிலில் அடிப்பட்டு பொதுமக்கள் இறக்கும் விபத்துகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாம்பலம் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் செல்லும் வயர் அறுந்து விழுந்ததால் அவ்வழியாக செல்லும் மின்சார ரயில்கள் விரைவு ரயில் செல்லும் பாதையில் திருப்பிவிடப்பட்டன.
இதனால் ரயிலில் கூட்டம் அலைமோதிய நிலையில் சென்னை பழவந்தாங்கலில் மின்சார ரயிலில் தொங்கி கொண்டு வந்தவர்கள் தடுப்புச் சுவரில் மோதியதில் 5 பேர் உயிரிழந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications