ஸ்கூட்டரின் ஆக்ஸிலேட்டரை முறுக்கிய 2 வயசு குழந்தை.. துணிக்கடை கண்ணாடியை உடைத்து பாய்ந்ததால் விபரீதம்
தேவக்கோட்டை: தேவக்கோட்டையில் ஸ்கூட்டர் ஆக்சிலேட்டரை குழந்தை திருகியதால் துணிக்கடைக்குள் வாகனம் புகுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே ஊனியூரை சேர்ந்தவர் அற்புதராஜ். இவரது மனைவி கவுசல்யா (26). இவர் தனது 2 வயது மகளுடன் இரு சக்கர வாகனத்தில் தேவக்கோட்டைக்குச் சென்றார்.

அங்கு திருப்பத்தூர் சாலையில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்துக் கொண்டு புறப்பட்டார். அப்போது வாகனத்தின் முன்புறம் நின்றிருந்த கவுசல்யாவின் குழந்தை இரு சக்கர வாகனத்தின் ஆக்ஸிலேட்டரை முறுக்கியுள்ளது.
இதில் ஸ்கூட்டர் அதிவேகமாக சென்று அங்கிருந்த துணிக்கடையின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு நுழைந்தது. கவுசல்யாவின் வாகனம் அந்த கடையில் இருந்த மேஜையில் மோதியது. இதில் சரிந்து விழுந்த கவுசல்யாவும் அவருடைய மகளும் காயமடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் இருவரையும் கடை ஊழியர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தேவக்கோட்டை நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கவுசல்யாவிடம் நடத்திய விசாரணையில் வாகனத்தை ஸ்டார்ட் செய்த போது ஆக்ஸிலேட்டர் பிடிக்கும் கையை எதற்கோ எடுத்த போது எதிர்பாராதவிதமாக அந்த குழந்தை ஆக்ஸிலேட்டரில் கையை வைத்து அப்படியே முறுக்கியுள்ளது.
இதனால் கவுசல்யாவின் வாகனம் துணிக்கடைக்குள் நுழைந்தது. குழந்தைகளை இரு சக்கர வாகனத்தில் வைத்து இயக்குவோர் உஷாராக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்கள்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications