மது போதையில் பரீட்சை எழுத வந்த பிளஸ் ஒன் மாணவர்கள் 20 பேர் சஸ்பெண்ட்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் தேர்வு எழுத போதையில் வந்த பள்ளி மாணவர்கள் 20 நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு கழுகுமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 1200 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியராக ஜிந்தா மாதா பக்கீர் இருந்து வருகிறார். இப்பள்ளியில் காலாண்டு தேர்வுகள் நடந்து வருகின்றன.
காலையில் பன்னிரெண்டாம் வகுப்புக்கும், மதியம் பதினொன்றாம் வகுப்புக்கும் தேர்வுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தேர்வு நடந்து கொண்டிருந்தபோது அறையில் மது வாடை அடித்ததாக கூறப்படுகிறது.
ஆசிரியர்கள் விசாரணையில் பதினொன்றாம் வகுப்பு மாணவர் ஒருவர் தேர்வு எழுத மது குடித்து விட்டு முழு போதையில் வந்திருப்பது தெரிய வந்தது. அவரிடம் விசாரித்த போது அவர் தேர்வு எழுதியபடியே பெஞ்சில் தலை வைத்து படுத்தார்.
இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்ட கலெக்டர், மற்றும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்க்கு தகவல் தெரிவித்தார். போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பள்ளிக்கு வந்து மாணவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் மது குடித்ததை ஓப்பு கொண்டார். தாசில்தார் ரமேஷ் விஏஓ மாரிச்சாமி ஆகியோரும் விசாரணை மேற்கொண்டனர். இதனை அடுத்து மாணவரின் பெற்றோரை அழைத்து வர சொல்லி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து மது அருந்தி விட்டு பள்ளிக்கு வந்த மாணவரை அக்டோபர் 30ம் தேதி வரை சஸ்பெண்ட் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
ஏற்கனவே இந்த பளளியில் மது அருந்தி விட்டு வந்த மாணவர் ஒருவர் பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக தொடக்க கல்வி அலுவலர் இன்று நேரடியாக வந்து விசாரணை நடத்துகிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications