ஹைகோர்ட்டில் மது அருந்திய 3 பேர் உட்பட 20 வழக்கறிஞர்களுக்கு பார்கவுன்சில் அதிரடி தடை!!
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அறைக்குள் போராட்டம் நடத்தியவர்கள், நீதிமன்ற வளாகத்தில் மது அருந்தியவர்கள் என மொத்தம் 20 வழக்கறிஞர்களுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது தமிழகம் மற்றும் புதுவை வழக்கறிஞர்கள் சங்கம்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அறைக்குள் நுழைந்து கடந்த செப்டம்பர் 14-ந் தேதியன்று தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி 10 வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

இதனைத் தொடர்ந்து போராட்டம் நடத்தும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தமிழகம்-புதுவை பார்கவுன்சில் மும்முரம் காட்டியது. இதன்படி தலைமை நீதிபதி அறைக்குள் போராட்டம் நடத்திய 10 பேர், மதுரை வழக்கறிஞர்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு விசாரணையை பார்க்க அனுமதி கோரி போராடிய 7 பேர் மற்றும் நீதிமன்ற வளாகத்தில் மது அருந்திய 3 பேர் என மொத்தம் 20 வழக்கறிஞர்கள் மீது தமிழகம்- புதுவை பார்கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த 20 பேரும் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் விசாரணை முடியும் வரையில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தமிழகம்- புதுவை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications