சிறார் காப்பகத்திலிருந்து 32 பேர் ஓட்டம்.. 14 பேர் கைது.. கழுத்தறுத்து 4 பேர் தற்கொலை முயற்சி
சென்னை: சென்னையிலுள்ள கெல்லீஸ் கூர் நோக்கு பள்ளியில் சிறார்களுக்கு நடுவே ஏற்பட்ட மோதலை பயன்படுத்தி 32 இளம் குற்றவாளிகள் சுவர் ஏறி குதித்து தப்பியோடிவிட்டனர். சம்பவ இடத்திற்கு எழும்பூர் மேஜிஸ்திரேட் நேரில் சென்று விசாரணை நடத்தினார். தப்பியோடியவர்களில் 14 பேர் பிடிபட்டனர்.

சென்னை, கெல்லீஸ் பகுதியில் அரசு கூர்நோக்கு பள்ளி செயல்பட்டு வருகிறது. சிறு வயதில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறார் குற்றவாளிகள் அங்கு அடைக்கப்பட்டுள்ளனர். இந்த பள்ளியில், மொத்தம் 53 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சிறுவர்கள் நடுவே திடீரென இன்று காலை உணவு வேளையின்போது, பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலை பயன்படுத்தி கூர் நோக்கு இல்லத்தில் இருந்து சுமார், 32 சிறுவர்கள் சுவரை ஏறி குதித்து வெளியே தப்பியோடியுள்ளனர்.

சிறார் குற்றவாளிகளை பிடிக்க சென்னை நகரில் போலீசார் அலர்ட் செய்யப்பட்டுள்ளனர். விவரம் கேள்விப்பட்டு, குற்றவாளிகளின் பெற்றோர் சிலர் கூர் நோக்கு இல்லத்தை முற்றுகையிட்டு தங்கள் பிள்ளைகள் உள்ளே பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை அறிவதற்காக காத்திருந்தனர். உரிய பதில் வராததால் போலீசாருடன் அவர்கள் வாக்குவாதம் நடத்தினர்.
போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்ட நிலையில், எழும்பூர் மேஜிஸ்திரேட் லட்சுமி இன்று மதியம், சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு நடத்தினார்.
இதனிடையே தப்பியோடிய சிறுவர்களில் 14 பேர் இன்று மதியம் போலீசாரிடம் பிடிபட்டனர். அதில், 3 சிறுவர்கள் போலீசாரை பார்த்ததும், டியூப் லைட்டை உடைத்து கழுத்தையும், கைகளையும் அறுத்துள்ளனர். இருப்பினும் உயிருக்கு ஆபத்தில்லை. மருதத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். எஞ்சிய சிறுவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications