சென்னையில் 218 இன்ஸ்பெக்டர்கள் கூண்டோடு டிரான்ஸ்பர்: கமிஷனர் உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் 218 இன்ஸ்பெக்டர்களை கூண்டோடு இடமாற்றம் செய்து கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

இதற்கிடையே, 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் ஊழியர்களை இடமாற்றம் செய்யக்கோரி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, அடுத்தடுத்து காவல் துறையில் இடமாற்ற அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. நேற்று 9 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் தற்போது சென்னையில் சென்னையில் 218 இன்ஸ்பெக்டர்களை கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கமிஷனர் ராஜேந்திரன் பிறப்பித்துள்ளார்.













Click it and Unblock the Notifications