போலீஸார் உடை அணிந்து 22 சவரன் நகை கொள்ளை... சோழவரம் அருகே மர்ம கும்பல் கைவரிசை
திருவள்ளூர்: சோழவரம் அருகே போலீஸார் என கூறி வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு 22 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதிமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே ஜனப்பன்சத்திரத்தை சேர்ந்தவர் சண்முகசாமி (68). இவர் தனது வீட்டின் முன் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இரவு, சண்முகசாமி, அவரது மனைவி சொர்ண மாரியம்மாள் (64), கடையில் வேலை பார்க்கும் விக்னேஸ்வரன்(28) ஆகிய 3 பேரும் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, போலீசார் உடையணிந்த ஒருவர் உட்பட நான்கு பேர் வீட்டிற்குள் புகுந்துள்ளனர். மேலும் உங்களது வீட்டில் கடத்தல் பொருட்கள் வைத்துள்ளதால், சோதனை நடத்த வேண்டும் என கூறியுள்ளனர். இதையடுத்து அவர்கள், நீங்கள் எந்த ஸ்டேஷனில் இருந்து வந்துள்ளீர்கள் என கேட்டுள்ளனர்.
இதனால் கோபமடைந்த அந்த கும்பல் அவர்களை தாக்கியுள்ளது. பின்னர் அனைவரையும் நாற்காலியில் கட்டிப்போட்ட அந்த கும்பல், கத்தி முனையில் சொர்ண மாரியம்மாள் அணிந்திருந்த தங்க சங்கிலிகள், பீரோவில் இருந்த நகைகள் என 22 பவுனை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க வந்த போலீஸார் தப்பிச்சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications