நெருங்கி வரும் தேர்தல்: தமிழகத்தில் 25 டி.எஸ்.பி.,க்கள் அதிரடி இடமாற்றம்; டி.ஜி.பி.,உத்தரவு
சென்னை: தமிழகத்தில் மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஒரே பணியிடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் 25 காவல் துணை கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. அசோக்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக்கு வருகிற மே மாதம் 22 ஆம் தேதியுடன் பதவிக் காலம் முடிவடைகிறது. எனவே அதற்கு முன்னதாக தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகின்றது. இந்நிலையில் மாநிலத்தில் ஒரே பணியிடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யக் கோரி தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.

இதன் விளைவாக தமிழக காவல்துறையில் அதிகாரிகள் கடந்த ஒரு மாதமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி., விஜயகுமார் பாளைங்கோட்டை உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். மணியாச்சி டி.எஸ்.பி.,யாக கோவிந்தராஜ், அருப்புக்கோட்டை டி.எஸ்.பி.,யாக தனபால், நன்னிலம் டி.எஸ்.பி.,யாக அறிவானந்தன், திருவாரூர் டி.எஸ்.பி.,யாக சுகுமாறன், ஓட்டன்சத்திரம் டி.எஸ்.பி.,யாக ராஜா, கூடலூர் டி.எஸ்.பி.,யாக ஸ்ரீனிவாசலு உள்ளிட்ட 25 காவல் துணைக் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி.அசோக்குமார் இன்று புதன்கிழமை உத்தரவிட்டார்.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள், ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பார்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications