முதல் முறையாக 'கோரசாக' அமைச்சர்கள் பதவியேற்பு! 14,14 பேராக பதவியேற்றனர்!!
சென்னை: அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் முதல்வர் ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் அமைச்சர்கள் 'கோரஷாக' பதவியேற்றனர். மொத்தம் 28 அமைச்சர்கள் 14, 14 பேராக 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் தமிழகத்தின் முதல்வரக ஜெயலலிதா இன்று காலை 11 மணிக்கு பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ரோசையா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்றனர். பொதுவாக புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா நடைபெறும் போது முதல்வரைத் தொடர்ந்து ஒவ்வொரு அமைச்சர்களும் தனித்தனியாக மைக் முன் வந்து பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதி மொழியும் எடுத்துக் கொள்வார்கள். அவர்களுக்கு ஆளுநர் தனித்தனியாக பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

ஆனால் இன்று அப்படி நடைபெறவில்லை. 28 அமைச்சர்களும் மொத்தமாக பதவி ஏற்றுக் கொண்டனர். 28 அமைச்சர்களும் இரு குழுக்களாக அதாவது 14, 14 பேராகப் பிரிக்கப்பட்டு மேடைக்கு அழைக்கப்பட்டனர்.
அவர்கள் மேடையின் இருபுறமும் நின்று கொண்டனர். இவர்களுக்குப் பதவி ஏற்க வசதியாக 14 மைக்குகள் வைக்கப்பட்டிருந்தன. ஆளுநர் ரோசையா "நான்" என்று வாசிக்கத் தொடங்கியது ஒவ்வொரு அமைச்சர்களும் அடுத்தடுத்து தங்களது பெயரை உச்சரித்துவிட்டு ஒரே கோரஷாக உறுதிமொழியை வாசித்து பதவியேற்றனர்.

இதனால் 10 நிமிடங்களுக்குள் 28 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். இதன்பிறகு அமைச்சர்கள் ஒவ்வொருவராக கையெழுத்திட்டனர்.

நல்லநேரம் முடிவடைவதற்குள் அனைவரும் பதவியேற்க வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி ஒரு ஏற்பாடு என்ற கிசுகிசுவும் விழா அரங்கில் கேட்க முடிந்தது!!
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications