மீண்டும் சிங்களர்கள் அட்டகாசம்.. புதுக்கோட்டை மீனவர்கள் 28 பேர் கைது
புதுக்கோட்டை: இலங்கைக் கடற்படையின் அட்டகாசம் சற்றும் குறையவில்லை. இன்று அதிகாலையில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவரக்ள் 28 பேரை இலங்கைக் கடற்படையினர் பிடித்துச் சென்ற சம்பவம் புதுக்கோட்டை மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடித்தளத்தில் இருந்து 270 படகுகளில் சுமார் 1100 மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் அனைவரும் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த இலங்கை கடற்படையினர் 7 படகுகளை பறிமுதல் செய்ததோடு அதில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 28 மீனவர்களையும் கைது செய்து இலங்கை கடற்படை தளத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதன் காரணமாக கடலோர மீனவர் கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஜெகதாப்பட்டினம் மீனவர் சங்கப் பிரதிநிதி குட்டியாண்டி கூறுகையில், மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி விட்டது. இதற்கு நிரந்தரத்தீர்வு காண மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஏற்கனவே 131 பேரைக் கைது செய்த இலங்கைக் கடற்படை தொடர்ந்தும் அடுத்தடுத்து மீன் பிடிப்பது போல தமிழக மீனவர்களைப் பிடித்து வரும் அட்டகாசத்தால் தமிழக மீனவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications