2015ன் இறுதிநாளிலும் ஓயாத இலங்கை அட்டகாசம்.. 29 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் 29 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. ஏற்கனவே, 40க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

இவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, பிரதமர் மோடி முதல்வர் ஜெயலலிதா கடிதமும் எழுதி வருகிறார்.

இந்நிலையில், இந்த ஆண்டின் இறுதி நாளான இன்று தமிழக மீனவர்கள் 29 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் திரிகோணமலைப் பகுதியில் மீன் பிடித்ததாக இலங்கை கடற்படைவழக்கு பதிவு செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

fisherman

இது தொடர்பாக மீன்வளத் துறை இணை இயக்குநர் சுப்புராஜ் கூறும்போது, "நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவர்கள் 29 பேரை இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். அவர்கள் அனைவரும் திரிகோணமலை ராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+