தீரன் பட பாணியில் கோவையில் பெண்ணை கொன்ற மேற்கு வங்க கொள்ளையர்கள் கைது
கோவை அருகே தோட்டத்தில் தங்கியிருந்த பெண்ணை கொன்று விட்டு, கணவர் மீது மின்சாரம் பாய்ச்சி விட்டு நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற வட மாநில கொள்ளையர்களை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Recommended Video

கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே தோட்டத்தில் தங்கியிருந்த பெண்ணை கொன்று விட்டு, கணவர் மீது மின்சாரம் பாய்ச்சி விட்டு நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மேற்கு வங்க மாநில கொள்ளையர்கள் மூவரை தனிப்படை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள கணுவாக்கரை ஊஞ்சல் குட்டை தோட்டத்தை சேர்ந்தவர் மயில்சாமி, இவரது மனைவி ராஜாமணி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒரு மகள் கோவையில் வேலை பார்த்து வருகிறார். மற்றொரு மகள் படித்து வருகிறார்.
தம்பதியர் இருவரும் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இவர்கள் புதிதாக வீடு கட்டி வருகிறார்கள். இதற்கு டைல்ஸ் ஒட்டும் பணியில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 3 பேர் பணியாற்றி வந்தனர்.

கொடூர கொலை
தொழிலாளர்கள் 3 பேரும் தோட்டத்து வீட்டிலேயே தங்கி வேலை செய்தனர். அவர்கள் மூன்று பேருக்கும் ராஜாமணி சமைத்து போட்டார். கடந்த வாரம் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் திடீரென ராஜாமணியை கொன்று விட்டு மயில்சாமி மீது மின்சாரத்தை பாய்ச்சி கொல்ல முயற்சி செய்தனர். சத்தம் போடவே 8 சவரன் நகை, 1 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு சென்று விட்டனர்.

தேடுதல் வேட்டை
கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை விசாரணையில் கொலையாளிகள் குறித்து அடையாளம் தெரிந்தது. மேற்கு வங்காளத்தை சேர்ந்த சாம்ராட்,25, அஜய்,18, பிந்து, 25 என்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்கள் பெண்ணை கொன்று நகை,பணத்தை கொள்ளையடித்து விட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றது தெரிய வந்தது. அவர்கள் வைத்திருந்த செல்போன் எண்ணை வைத்து விசாரித்த போது அவர்கள் ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் செல்போன் சிக்னல் காட்டியது.

மேற்கு வங்கம் விரைவு
கோவையில் இருந்து, ரயிலில் வடமாநிலத்துக்கு தப்பிச் சென்றபோது, துலுக்கம்பாளையம் பகுதியில் செல்போனை வீசிச் சென்றிருக்கலாம் எனக் கருதிய போலீசார், ரயில்வே டிராக்கின் இருபுறமும் செல்போனைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். கொள்ளையர்கள் மேற்கு வங்கத்திற்கு சென்றிருக்கலாம் என்று அங்கும் தனிப்படை போலீசார் தேடிச் சென்றனர்.

3 கொள்ளையர்கள் கைது
இதனிடையே மேற்கு வங்கத்தில் பதுங்கியிருந்த 3 கொள்ளையர்களை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர். அவர்கள் மூவருக்கும் வேறு கொலை, கொள்ளையில் தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம்












Click it and Unblock the Notifications