பட்டா, 3 ஏக்கர் நிலம், அடமானம்.. மாமனுக்கு வாழைதோப்பில் காத்திருந்த சம்பவம்.. ஆடிப்போன திருப்பத்தூர்
திருப்பத்தூர்:தன்னுடைய வாழை தோட்டத்திற்கு உரம் போட சென்ற தாய்மாமனை, புரட்டி புரட்டி எடுத்துவிட்டார் மருமகன்.. சொத்து விவகாரம் காரணமாக நடந்த இந்த சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் தந்து கொண்டிருக்கிறது.
நிலத்தை அடமானமாகக்கொண்டு, அதன்பேரில் கடன்களை பெறும் வசதிகள் நிறைய உண்டு.. இந்த கடனை பெற வேண்டுமானால், அதற்கு தேவையான ஆவணங்களை முறையாக சமர்ப்பிக்க வேண்டும்.

அடமானம் கடன் பெற ஆவணங்கள்
அடமானக் கடன் பெற தேவையான ஆவணங்கள், அடையாளச் சான்று, முகவரிச் சான்று, வருமானச் சான்று, வங்கி அறிக்கைகள், சொத்து ஆவணங்கள், ஏற்கனவே உள்ள வங்கியின் NOC. பான் கார்டு, முந்தைய 6 மாதத்தின் வங்கிக் கணக்கு அறிக்கைகள், ஐடிஆர் வருமானம், நிதிநிலை அறிக்கைகள் என அத்தனையும் தேவைப்படும்.
அதுமட்டுமல்ல, அடமானக் கடன் பெறும்போது, சொத்தின் குறைந்தபட்ச மதிப்பு கடன் தொகையில் 200% ஆக இருக்க வேண்டும் என்றும், கடன் வாங்குபவர், குறைந்தபட்ச கிரெடிட் ஸ்கோர் அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதும் விதியாகும்.. இதற்கு பிறகே, தகுதி மற்றும் EMIஐ சரிபார்த்து, கடன் தகுதியைச சரிபார்த்து, விண்ணப்பிக்க வேண்டும்.
நில அடமானம் சிக்கல்
நில அடமானம் தொடர்பாக, இதுபோன்ற நடைமுறைகளை பின்பற்றாமல் போகும்பட்சத்தில்தான், ஏராளமான சிக்கல்கள் எழுகின்றன.. சிலசமயம், குடும்ப உறவுகளை சிதைப்பதுடன், உயிர்களையும் காவு வாங்கிவிடுகிறது.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ஒரு பகீர் சம்பவம் நடந்துள்ளது.. வக்கணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் திம்மராயன் .. 48 வயதாகிறது.. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். திம்மராயனின் அக்காவுக்கு சக்கரவர்த்தி என்ற மகன் இருக்கிறார். இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவருடைய 3 ஏக்கர் நிலத்தை ரூ.38 லட்சத்திற்கு, பைனான்சியரிடம் அடமானம் வைத்துள்ளதாக தெரிகிறது.
காலையிலேயே பரபரப்பு
இந்த தகவலை அறிந்த திம்மராஜன், சக்கரவர்த்தியின் நிலம் தொடர்பான பட்டாவை பைனான்சியரிடம் இருந்து பெற்று, நிலத்தை தனது பெயருக்கு மாற்றிக்கொண்டதாக தெரியவருகிறது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பைனான்ஸியரிடமிருந்து, அந்த இடத்தை, தன் பெயருக்கு மாற்றிக் கொண்டாராம்.. இதனால், சக்கரவர்த்தி மற்றும் திம்மராயன் இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை வாழைத்தோப்பில் உரம் போடச்சென்றார் திம்மராஜன்.. அப்போது, அங்கு சென்ற சக்கரவர்த்தி, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் திம்மராயனை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்..
இதுகுறித்து தகவலறிந்து ஜோலார்பேட்டை போலீசார், திம்மராயனின் சடலத்தை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்து, தப்பியோடிய சக்கரவர்த்தியை தேட கொண்டிருக்கிறார்கள்.. காலையிலேயே பட்டப்பகலில், தாய்மாமனை, அக்கா மகன் வெட்டிக்கொன்றதால், அந்த பகுதியே வெலவெலத்து போய்விட்டது.












Click it and Unblock the Notifications