குளித்தலை காவிரி ஆற்றில் மூழ்கி 3 திருச்சி மாணவர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலையில், காவிரி ஆற்றில் குளித்த திருச்சியைச் சேர்ந்த 3 கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.

குளித்தலை சபாபதி நாடார் தெருவில் வசித்து வருபவர் ஆசிக் (21). இவா் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் எம்.ஏ. அரபிக் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவா் தனது வீட்டில், விடுதியில் தங்கி ஒன்றாக படித்து வரும் நண்பா்களுக்கு விடுமுறை நாளான நேற்று விருந்து வைத்துள்ளார்.

3 college students drowned in Cauvery river

விருந்துக்கு வந்த நண்பா்கள் 15 பேரில் தென்காசியைச் சோ்ந்த அக்பா் பாதுஷா (19), திண்டுக்கல் நஸ்ருதீன் (19) இவா்கள் இருவரும் திருச்சி ஜமால் கல்லூரியில் பி.ஏ. இரண்டாமாண்டு அரபி பயின்று வருகின்றனா். இவா்களுடன் எம்.ஏ. இரண்டாமாண்டு படிக்கும் கரூா் பள்ளப்பட்டியைச் சோ்ந்த சித்திக் அலி (21) உள்ளிட்டோரும் பின்னர் குளித்தலை காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றனர்.

3 college students drowned in Cauvery river

அப்போது பாதுஷா, நஸ்ருதீன், சித்திக் அலி ஆகியோர் புதை மணலில் சிக்கிக் கொண்டனர். தண்ணீர் வேகமாக சென்றதாலும், புதை மணலில் சிக்கியதாலும் இவர்களால் மீண்டு வர முடியாமல் போய் விட்டது. தண்ணீரில் மூழ்கி மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

3 college students drowned in Cauvery river

உடன் வந்த நண்பர்களே முசிறியிலிருந்து தீயணைப்புப் படையினர் வருவதற்கு முன்பு 3 பேரின் உடல்களையும் கரைக்குக் கொண்டு வந்து விட்டனர். இச்சம்பவம் குறித்து குளித்தலை டி.எஸ்.பி. ஜமீம், இன்ஸ்பெக்டா் குருநாதன், கோட்டாட்சியா் சக்திவேல், வட்டாட்சியா் ரவிச்சந்திரன் ஆகியோர் விசாரணை செய்து வருகின்றனா்.

3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+