சென்னை: கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த 3 பேர் விஷவாயு தாக்கி பலி; இருவர் கைது
சென்னை: பெரம்பூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த மூன்று பேர் விஷவாயு தாக்கி பலியான சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பெரம்பூர் ரயில்நிலையம் அருகே உள்ள தனியார் உணவகம் ஒன்றில் பணிபுரியக்கூடிய ஊழியர் ஒருவர், அந்த உணவகத்தின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கியுள்ளார். அப்போது விஷவாயுவால் தாக்கப்பட்ட அவர் மயக்கமடைந்துள்ளார்.

மயக்கத்தில் இருந்தவரை காப்பாற்றுவதற்காக சக ஊழியர்கள் இருவர் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கினர். அவர்களும் விஷவாயுவால் தாக்கப்பட்டு மயக்கமடைந்தனர். இதனால் ராமகிருஷ்ணன்,வினய்,சதீஸ் ஆகிய அந்த மூன்று ஊழியர்களும் கழிவுநீர் தொட்டிக்குள்ளேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர்,மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த மூவரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த உயிரிழப்பு குறித்து செம்பியம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அந்த ஓட்டலின் உரிமையாளர் மோகன் ராவ், மேலாளர் கோபி ஆகிய இருவரை கைது செய்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications