பெருந்துறையில் மழைக்கு ஒதுங்கிய சாமிநாதன்... மரணத்தை பரிசளித்த பாப்பாத்தி
மழையின் நனைந்து நடுக்கத்துடன் வந்த 70 வயது முதியவரை கட்டாயப்படுத்தி உறவு கொண்டதால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். மூவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு: பெருந்துறையில் மழையின் நனைந்து நடுக்கத்துடன் வீட்டிற்கு வந்த முதியவரை கட்டாயப்படுத்தி உறவு கொண்டதால் அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். கள்ளக்காதலி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சின்னமடத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன், 70, மிளகாய் வியாபாரம் செய்து வந்த இவருக்கு மாலதி என்ற மகளும், மருமகன் குணசேகரனும் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பவானியில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்துக்கு மகனும், மருமகளும் சென்றனர்.

ஊரில் இருந்து திரும்பி வந்துபார்த்த போது, சாமிநாதன் வீட்டில் இல்லை. பெருந்துறை புது பஸ் ஸ்டாண்டில், சாமிநாதனின் இரு சக்கர வாகனம் மட்டும் இருந்தது. போலீசில் புகார் அளித்து அவரைத் தேடிய போது சிப்காட் அருகே மலையாண்டி காட்டுப்பகுதியில் பிணமாகக் கிடந்தார்.
பெருந்துறை போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர் அணிந்திருந்த நகைகள், பணம் அப்படியே இருந்தது. சாமிநாதன் தனது இரு சக்கர வாகனத்தை பேருந்து நிலையத்தில் நிறுத்தி விட்டு சிப்காட் பகுதிக்கு சென்றார் என்பது தெரியவில்லை.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில்
சென்னிமலை ஒன்றியம் வரப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் தேன்மொழியிடம் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்தனர். அவர்கள் பெருந்துறை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. விஜயமங்கலம் விண்டெக்ஸ் நகரில் வசித்து வருபவர் பாப்பாத்தி,57, கணவனை இழந்த இவர் தனியாக வசித்து வருகிறார். சாமிநாதனும் பாப்பாத்தியும் பல வருடங்களாக தொடர்பில் இருந்துள்ளனர்.
நவம்பர் 30ஆம் தேதி மதியம் பாப்பாத்தி வீட்டிற்கு சாமிநாதன் வந்தார். அப்போது அவர் மழையில் நனைந்து நடுக்கத்துடன் வந்திருக்கிறார். அந்த நிலையிலும் உறவுக்கு அழைத்தாரம் பாப்பாத்தி. சாமிநாதன் மறுத்தும் அவருடன் பாப்பாத்தி வலுக்கட்டாயமாக உறவில் ஈடுபட்டாராம்.
அப்போது சாமிநாதனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்துள்ளது. இதனால், பயந்து போன பாப்பாத்தி சென்னிமலை அருகே வாய்பாடியில் வசிக்கும் தன் மகன் கிருஷ்ணனுக்கும்,சென்னிமலை ஓட்டப்பாறை பகுதியில் குடியிருக்கும் சம்பந்தி ஈஸ்வரியிடமும் கூறி அவர்களை வரவழைத்தார்.
இருவரும் பாப்பாத்தியுடன் சேர்ந்து சாமிநாதன் சடலத்தை சமையலறையில் மறைத்து வைத்துள்ளனர். இரவான பின்னர் மூவரும் கிருஷ்ணனுக்கு சொந்தமான காரில் சாமிநாதன் சடலத்தை சிப்காட் பகுதியில் உள்ள ஓடைக்காட்டூர் பகுதியில் போட்டுள்ளனர்.
பாப்பாத்தி வீட்டில் நின்றிருந்த சாமிநாதனின் இரு சக்கர வாகனத்தை பெருந்துறை பஸ் நிலையத்தில் நிறுத்தி விட்டு வந்து விட்டதாக கூறினர். இதனையடுத்து பாப்பாத்தி, அவரது மகன் கிருஷ்ணன், சம்பந்தி ஈஸ்வரி ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குக் பதிவு செய்தனர். பெருந்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
நேரம் காலம் பார்க்காமல் வயதானவர் என்றும் பார்க்காமல் உறவில் ஈடுபட்ட பாப்பாத்தியினால் உயிரை விட்டுள்ளார் சாமிநாதன்.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications