பேய் ஓட்டிய மந்திரவாதி…. தலைக்குள் இறக்கிய 3 இன்ச் ஆணி: ஆபரேசன் மூலம் அகற்றம்

Subscribe to Oneindia Tamil

3 inch nail removed from man's head
நெல்லை: நெல்லையில் பேய் ஓட்டுவதாக கூறி மந்திரவாதி ஒருவர் 3 இன்ச் ஆணியை மனநிலை பாதித்த ஒருவரின் தலையில் இறக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மண்டை ஓட்டினை துளைத்து மூளையில் பதியவே, அவரின் கை கால்கள் செயலிழந்து விடவே மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அந்த ஆணியை அகற்றியுள்ளனர்.

நெல்லை டவுனை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவருக்கு கடந்த ஒன்றரை மாதமாக கை, கால் செயல்படமால் இருந்ததாகவும், தலை பகுதியில் வலி இருப்பதாகவும் கூறி அவரது உறவினர்கள் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரித்த போது ஆணிகள் உள்ள கட்டை ஓன்று அவரது தலையில் விழுந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

நெல்லை அரசு மருத்துவமனை நரம்பியல் நிபுணர் டாக்டர் ஜோயல், தனபாண்டியன் ஆகியோர் அவருக்கு எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுத்து பரிசோதித்தனர். அப்போது சொக்கலிங்கம் தலையின் மையப்பகுதியில் 3 இன்ச் உயரம் உள்ள துருபிடித்த ஆணி ஒன்று முழுமையாக இறங்கி மறைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தலையில் புகுந்த ஆணி தலையின் வலது, இடது மூளை மையத்தில் ரத்து குழாயை முழுமையாக அடைத்த படி இருந்தது.

இதன் காரணமாக அவரது மூளையில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு அவரது இடது கை, கால்கள் செயல் இழந்து விட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரது தலை பகுதியில் மூளை நரம்பியல் டாக்டர்கள் ஜோயல், தானபாண்டியன் தலைமையிலான மருத்துவர்கள் சுமார் ஓன்றரை மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து 3 இன்ச் ஆணியை வெளியே எடுத்தனர். இதன் பிறகே அவரது உடல் நிலை சீரடைந்து கை, கால்கள் செயல்பட தொடங்கின.

சொங்கலிங்கத்தின் உச்சந்தலையில் அடிக்கப்பட்ட ஆணி அப்படியே ஒரு வாரம் அவரது தலையில் இருந்தது தெரிய வந்தது. ஸ்கேன் மூலம் தலையில் ஆணி இருப்பதை உறுதி செய்த பின்னர் அவரது உறவினர்களிடம் மீண்டும் சந்தேகப்பட்டு விசாரித்த மருத்துவர்கள், தலையில் கட்டை விழுந்தால் கொஞ்சம் ஆணி மட்டுமே தலையில் இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் ஆணி முழுவதுமாக இறங்க வாய்ப்பே இல்லை என்றனர். எப்படி 3 இன்ச் அளவுக்கு ஆணி தலைக்குள் போனது என விசாரித்தனர்.

அப்போது, பேய் விரட்டுவதற்காக ஒரு வாரத்திற்கு முன்பு மந்திரவாதி ஒருவரிடம் அழைத்து சென்றதாகவும், அவர் பேயை விரட்ட உச்சந்தலையில் ஆணி அடித்ததாகவும் கூறினர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சொக்கலிங்கம் சற்று மனநிலை பாதித்தவறாக இருந்துள்ளார். இதனால் அவருக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மனநிலை பாதித்த ஒருவரின் தலையில் இருந்து 3 இன்ச் ஆணியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+