வாக்குச்சாவடி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து- 2 பெண்கள் உள்பட 3 பேர் காயம்
சிவகங்கை: தேவகோட்டை அருகே வாக்குச்சாவடியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.
தமிழக சட்டசபை தேர்தல் நேற்று நடைபெற்றது. பெரிய வன்முறை சம்பவங்கள் ஏதுமின்றி அமைதியாக இந்த தேர்தல் நடந்து முடிந்துள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், பல வாக்குச்சாவடிகளில் மற்றவர்களின் சதி இல்லாமல், எதிர்பாராத பல சோக சம்பவங்கள் நடைபெற்றன.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதி தேவகோட்டை அருகே கோட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியின் ஒரு பகுதியில் நேற்று காலை திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில், வாக்களிப்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த கோட்டூரைச் சேர்ந்த ராமன் மனைவி பாப்பா, 60, சண்முகநாதன் மனைவி காளியம்மாள்,45, நைனார்வயலைச் சேர்ந்த செந்தில்நாதன், 23, ஆகியோர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மூவரும் சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் பீதியான மற்ற வாக்காளர்கள் வாக்களிக்க முன்வரவில்லை. பின்னர் வாக்காளர்களை சமரசப்படுத்திய தேர்தல் அதிகாரிகள், வாக்குப்பதிவு இயந்திரத்தை வேறு அறைக்கு மாற்றினார்கள். அதனைத் தொடர்ந்து மக்கள் மீண்டும் வரிசையில் நின்று வாக்களிக்க ஆரம்பித்தனர். இதனால் அரை மணி நேரத்திற்கும் மேலாக அந்த வாக்குசாவடியில் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.
இதேபோல், சிவகங்கை தொகுதி ஒக்கூர் அண்ணாநகர் வாக்குசாவடியில் வாக்களித்துவிட்டு வந்த வேல்முருகன்(45) என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை காற்றோட்டமான பகுதிக்கு போலீசார் தூக்கி வந்தனர். ஆனால், அதற்குள்ளாக பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இதனால் அந்த வாக்குச்சாவடியில் சிறிதுநேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications