தாமிரபரணி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக பலி
நெல்லை: திருநெல்வேலி முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் பிரபாகரன் மகன் கிருபாகரன் வயது 21, செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர் உஸ்மான் மகன் தமீம் அன்சாரி வயது 21, குமாரவேல் மகன் சோபன்பாபு வயது 21. மூவரும் சென்னை ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியில் பி.இ இறுதியாண்டு பயின்று வந்தனர். மூவரும் நண்பர்கள். விடுமுறையில் பிரபாகரன் வீட்டுக்கு வந்தனராம்.

திங்கள் கிழமை காலை 11 மணி அளவில் மூவரும் முக்கூடலில் தாமிரபரணி ஆற்றிற்கு குளிக்கச் சென்றனர். அங்கு கோயில் பின்புறம் ஆழமான இடத்தில் குளித்தபோது சுழலில் சிக்கிக் கொண்டனர். நீச்சல் தெரியாததால் ஆற்றில் மூழ்கி மூவரும் பரிதாபமாக இறந்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் பாப்பாக்குடி போலீசார் மூவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த அக்டோபர் 1ம் தேதி சனிக்கிழமை மானூர் குறிப்பான்குளத்தைச் சேர்ந்த சதாம் உசேன் என்பவர் இதே இடத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications