சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து.. 3 தொழிலாளர்கள் பலி
Recommended Video

சிவகாசி: சிவகாசியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பட்டாசு உற்பத்தி மிக வேகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில்தான், சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் இன்று காலை பட்டாசு தயாரிக்கும் தொழிலில் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.

பேன்சி ரக பட்டாசுகள் அங்குத் தயாரிக்கப்பட்டு வந்தது. அப்போது உராய்வு காரணமாக திடீர் என வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். இதில் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்தில் தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். உயர் அதிகாரிகள் அங்கு விரைந்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications