ஈரோடுக்கு கொண்டு போய் தலித் மாணவர் கோகுல்ராஜ் கொலை... மேலும் 3 பேருக்கு தொடர்பு… பரபரப்பு தகவல்
திருச்செங்கோடு: தலித் மாணவர் கோகுல்ராஜை ஈரோடுக்கு கடத்திக் கொண்டு போய் கொலை செய்ததாகவும், இந்த கொலை வழக்கில், மேலும், 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக, சரண் அடைந்த சிவக்குமார் தெரிவித்துள்ள தகவலால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் என்ஜினியர் கோகுல்ராஜ் (22). இவர் கடந்த மாதம் திருச்செங்கோடு மலைக்கோவிலில் தனது தோழியுடன் பேசிக்கொண்டிருந்த போது ஒரு கும்பல் கடத்தி கொலை செய்து, உடலை பள்ளிபாளையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் வீசினர்.

இது தற்கொலை என்று கூறப்பட்ட நிலையில் கோகுல்ராஜ் பெற்றோர்களும், உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரை கைதுசெய்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக சேலம் நெத்திமேடு பொடாரன்காடு பகுதியை சேர்ந்த சிவக்குமார், தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் நீதிமன்றத்தில் கடந்த வாரம் சரணடைந்தார். இவர் கோகுல்ராஜ் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான தீரன் சின்னமலை பேரவையின் நிறுவனர் யுவராஜின் ஆதரவாளர் ஆவார். அந்த அமைப்பின் மாவட்ட செயலாளராகவும் உள்ளார்.
இந்நிலையில் சரண் அடைந்த சிவக்குமாரை, போலீசார் புதன்கிழமை 5 நாள் காவலில் எடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது, திருச்செங்கோட்டில் இருந்து கோகுல்ராஜை ஈரோடுக்கு அழைத்து சென்று, அங்கு வைத்து கொலை செய்யப்பட்டதாகவும் சிவக்குமார் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கொலையில் தலைமறைவாக உள்ள யுவராஜ் மற்றும் சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் இந்த நிலையில் கொலையில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக சிவக்குமார் கூறியதோடு அந்த 3 பேரின் விபரங்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications