அடுத்த வாரம் கல்யாணம்.. அப்பா அம்மாவுடன் நடு ராத்திரியில்.. அதிர வைத்த ஸ்ரீதர்.. பதற வைத்த முடிவு!
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்
தென்காசி: அடுத்த வாரம் ஸ்ரீதருக்கு கல்யாணம்.. ஆனால் அப்பா, அம்மாவுடன் நடுராத்திரி விஷம் சாப்பிட்டு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஆழ்வார்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சந்தானம்.. இவர் ஒரு மிட்டாய் வியாபாரி.. இவர் பலசரக்குப் பொருட்களை விற்கும் ஏஜன்சியும் எடுத்து நடத்தி வந்துள்ளார். மனைவி பெயர் லட்சுமி.. பொட்டல்புதூரில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றியவர்.
இவர்களுக்கு ஆரோக்கிய ஸ்ரீதர் என்ற மகனும், ஜோதி என்ற மகளும் உள்ளனர்.. ஸ்ரீதர், ஒரு என்ஜினியர்.. ஜோதி காலேஜில் படித்து வருபவர்.

புதுவீடு
இந்நிலையில், ஒன்றரை மாசத்துக்கு முன்பு சந்தானம் புது வீடு ஒன்று கட்டி குடும்பத்துடன் குடியேறினார்.. ஆனால் இவருக்கு ஏற்கனவே நிறைய கடன் இருப்பது போல தெரிகிறது.. இவ்வளவு நாள் பொறுத்து போனவர்கள், சந்தானம் வீடு கட்டியதும் நேரடியாக வந்து கொடுத்த கடனை கேட்டு நெருக்கடி தந்தனர்.

தகராறு
அப்படித்தான் கடந்த 15-ந் தேதி அதாவது பொங்கல் அன்று, சிலர் வீட்டுக்கு வந்து கடனை உடனே தருமாறு கேட்டு தகராறு செய்திருக்கிறார்கள்.. இதனால் சந்தானம், லட்சுமி, ஸ்ரீதர் 3 பேருமே மனமுடைந்து போய்விட்டனர்.. அன்று நள்ளிரவு 3 பேருமே விஷம் குடித்துவிட்டனர்.

அலறினார்
நள்ளிரவு என்பதால் ஜோதி தூங்கி கொண்டிருந்தார்.. அதனால் விடிகாலையில் எழுந்து பார்க்கும்போதுதான், 3 பேரும் மயங்கி விழுந்திருப்பதை பார்த்துஅலறினார்.. அந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து 3 பேரையும் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சந்தானம் அங்கு பரிதாபமாக இறந்தார்.

3 பேரும் பலி
இதையடுத்து லட்சுமி, ஆரோக்கிய ஸ்ரீதருக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டும், அவர்களும் அடுத்தடுத்து பலனினிறி உயிரிழந்துவிட்டனர்.. ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வரும் 27ஆம் தேதி ஸ்ரீதருக்கு கல்யாணம் நிச்சயம் ஆகி உள்ளதாம்.

அவமானம்
ஸ்ரீதர் ஆன்லைன் பிசினசும் செய்து வந்திருக்கிறார்.. இந்த பிசினசுக்காக பலரிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கி வைத்திருந்திருக்கிறார். இதில்தான் அவருக்கு நிறைய நெருக்கடி ஏற்பட்டு, கடன் எல்லைமீறி விட்டது. பொங்கல் அன்று வீட்டுக்கு வந்து தகராறு செய்தவர்கள், வீட்டில் இருந்த பொருட்களைகூட தூக்கி சென்று விட்டார்களாம்.. இதை அக்கம்பக்கத்தனர் பார்த்துள்ளனர்.. இதுதான் இவர்களக்கு பெருத்த அவமானமாக போயிருக்கிறது என்று போலீசார் யூகிக்கிறார்கள்... எனினும் தற்கொலைக்கான முழு விசாரணையும் தீவிரமாக நடந்து வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications