100 வருட பழமையான கட்டடத்தில் இயங்கிய 3 புதுச்சேரி பள்ளிகள் இழுத்து மூடல்!
புதுச்சேரி: புதுவையில் பழைய நகராட்சி கட்டிடம் இடிந்து விழுந்ததால், முன்னெச்சரிக்கையாக, புதுச்சேரியில், நூறாண்டு பழமையான கட்டடங்களில் இயங்கி வந்த 3 பள்ளிகள் மூடப்பட்டன.
புதுவை கடற்கரை சாலையில் சுமார் 140 ஆண்டுகள் பழமையான 2 மாடி நகராட்சி கட்டிடம் இருந்து வந்தது. கட்டிடம் பழுதடைந்திருந்ததால் அதில் இயங்கி வந்த நகராட்சி அலுவலகம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.

பின்னர் பலகோடி ரூபாய் செலவில் அந்த கட்டிடத்தை புனரமைக்க திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வந்தன. சமீபத்தில் பெய்த தொடர்மழையால் நேற்று முன்தினம் இந்த கட்டிடத்தின் மேல்தளம் இடிந்து விழுந்தது.
அங்கு வேலை செய்த 10 தொழிலாளர்கள் சாப்பிட சென்றிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பாதுகாப்பு கருதி அந்த கட்டிடத்தை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து புதுவையில் உள்ள 100 ஆண்டுகளுக்கும் மேலான கட்டிடங்களை அரசு அதிகாரிகள் கணக்கெடுத்தனர். இந்த பட்டியலில் மிஷன் வீதியில் உள்ள கலவை கல்லூரி ஆண்கள் பள்ளி, வ.உ.சி ஆண்கள் பள்ளி, சுப்ரெய்ன் வீதியில் உள்ள பான்சியோனா பிரெஞ்சு பெண்கள் பள்ளியும் அடங்கும்.
தொடர் மழையை கருத்தில் கொண்டு மாணவர்கள் பாதுகாப்பு கருதியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று இந்த 3 பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்பட்டது. ஆனால் இதனை அறியாமல் வழக்கம்போல் இந்த பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் வந்தனர்.
திடீர் விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்பட்டதற்கான காரணம் பற்றி அந்த பள்ளிகளின் முன்பு நோட்டீஸ் போர்டில் எழுதப்பட்டிருந்தது. எனவே மாணவ, மாணவிகள் ஏமாற்றத்துடன் வீடுகளுக்கு திரும்பி சென்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications