3 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் அடைப்பு.. கோட்டைப்பட்டினத்தில் சோகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோட்டைப்பட்டினம்: நெடுந்தீவு அருகில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 3 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் மூவர் மீன் பிடிக்கக் கடலுக்குள் சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அந்தப் பக்கம் வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் மூவரைக் கைது செய்தனர். அவர்கள் கொண்டு சென்ற படகும் கைப்பற்றப்பட்டது.

3 Tamil Nadu fishermen sent to Jaffna prison by Sri Lanka Navy

கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணைக்குப் பின்னர் அவர்கள் 3 பேரையும் யார்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த மாதம் 8ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதால், கோட்டைப்பட்டினத்தில் உள்ள அவர்களது உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Three fishermen belonging to Tamil Nadu have been sent to Jaffna Jail.
Please Wait while comments are loading...