சென்னையில் குடோன் பூட்டை உடைத்து 20 'ஏசி'க்களை கூலாக கொள்ளையடித்த மூவர் கைது!
சென்னையில் ஒரு குடோனில் பூட்டை உடைத்து 20 ஏசி மெஷின்களை திருடியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video

சென்னை: சென்னையில் ஒரு குடோனில் பூட்டை உடைத்து ஏசி மெஷின்களை திருடியதற்காக 3 பேரை மதுரவாயல் போலீஸார் கைது செய்தனர்.
மதுரவாயல் பல்லவன் நகர் 1-ஆவது தெரு பகுதியில் இருப்பவர் பாலசுப்பிரமணி. இவர் குடோனில் ஏர்கண்டிஷனர்கள் (ஏசி) வைத்து விற்பனை செய்து வருகிறார் . இந்நிலையில் அவர் கடந்த 9- ஆம்தேதி குடோனை மூடி விட்டு கோயம்பேடு பகுதியில் உள்ள தனது மற்றொரு கடைக்கு சென்றுள்ளார்.

ஒரு வாரம் கழித்து மதுரவாயலில் உள்ள குடோனுக்கு சென்று பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டு சுமார் 20 ஏசிக்கள் திருடப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து மதுரவாயல் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், திருட்டு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஏசி மெஷின்களை திருடியது வேலூர் மாவட்டம் குடியாத்தம் ,வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக்ராஜா (22) ,பவித்ரன் (23) மற்றும் சுரேந்தர் (32) ஆகியோர் என்று தெரியவந்தது.
இதையடுத்து மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில் திருடப்பட்ட ஏசிக்களை வேலூரில் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து வேலூரில் இருந்து அவற்றை மதுரவாயல் குற்றப்பிரிவு ஆய்வாளரன ஈஸ்வரன் தலைமையிலான படையினர் மீட்டு வந்தனர். பின்னர் மூவர் மீதும்திருட்டு வழக்கு பதியப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications