திருவண்ணாமலை: கிணறு வெட்டும் போது மண் சரிந்து விபத்து - 3 பேர் பலி
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தேவனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவருக்கு சொந்தமான கிணற்றில் சுரேஷ், முனியப்பன் மற்றும் சுதாகர் ஆகிய முவரும் தூர் வாரும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று மதியம் கிணற்றில் பாறைகள் அதிகமாக இருந்ததால் வெடி வைத்து ஆழப்படுத்த ஏற்பாடு செய்துள்ளனர். கிணற்றில் வெடி வைப்பதற்காக டிரில்லர்கள் பயன்படுத்தி துளை போட்டுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மண் சரிந்துள்ளது. இதனால் கிணற்றில் பணியில் இருந்த மூவரும் மண்ணில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது குறித்து புதுப்பாளையம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிணறு ஆழப்படுத்தும் பணியில் மண் சரிவு ஏற்பட்டு 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications