For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதுக்கோட்டையில் பயங்கரம்... தாயின் தலையை வெட்டி எடுத்து வந்த மகனால் பரபரப்பு!

புதுக்கோட்டை அருகே சொத்து தகராறில் தாயின் தலையை வெட்டி எடுத்துக்கொண்டு காவல்நிலையத்திற்கு வந்த மகனால் பரபரப்பு ஏற்பட்டது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    தாயின் தலையை வெட்டி எடுத்து வந்த மகனால் பரபரப்பு!-வீடியோ

    புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே சொத்துத் தகராறில் பெற்ற தாயின் தலையை துண்டாக வெட்டி எடுத்துச் சென்று போலீஸ் நிலையத்தில் மகன் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே மறவன்பட்டியைச் சேர்ந்தவர் ஆனந்த். 30 வயதான ஆனந்த் கட்டிட கூலி வேலை செய்து வருகிறார். இவரின் தாய் ராணிக்கும் இவருக்கும் சொத்துகளை பிரிப்பது தொடர்பாக அடிக்கடி வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.

    30 years TN man surrendered before Pudukottai police with severed head of his mother

    இந்நிலையில் நேற்றைய தினம் தனது பங்கு சொத்தை பிரித்துத் தருமாறு ஆனந்த் தாயாரிடம் கேட்டுள்ளார். அதற்கு ராணி மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

    ஆத்திரமடைந்த ஆனந்த், தனது தாய் என்றும் பாராமல் ராணியை கூர்மையான ஆயுதத்தால் வெட்டினார். அப்போதும் ஆத்திரம் தீராமல் ராணியின் தலையை துண்டாக வெட்டி எடுத்தார். அந்த தலையுடன் சாலையில் நடந்து சென்று கறம்பக்குடி போலீசில் சரணடைந்தான்.

    சாலையில் தலையுடன் நடந்து சென்ற ஆனந்தைப் பார்த்த மக்களும், போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, போலீசார் விரைந்து வந்து ராணியின் உடலைப் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர். ஆனந்தை கைது செய்து போலீசார் விசாரண நடத்தி வருகின்றனர். பெற்ற மகனாலேயே கொலை செய்யப்பட்ட ராணி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தனது கணவரை கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    A 30-year-old man sent the personnel of a police station in Pudukottai district into a tizzy when he walked in with the "severed head" of his mother after allegedly killing her
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X