தமிழகத்தில் இதுவரை 32 செ.மீ மழையளவு பதிவு - வானிலை ஆராய்ச்சி மையம்
சென்னை: தமிழகத்தில் இந்த வருடம் சராசரி மழையளவு 32 செ.மீட்டராக பதிவாகியுள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். இந்த பருவமழை காலத்தில் தமிழகம் பெறும் மழைப்பொழிவின் அளவு 44 செ.மீ ஆகும்.

கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை இயல்பு மற்றும் இயல்புக்கு எஞ்சிய நிலையில் மழையை தமிழகம் பெற்றது. ஆனால் 2012 ஆம் ஆண்டில் 16 சதவீதம் குறைவாகவும், 2013 ஆம் ஆண்டில் 33 சதவீதம் குறைவாகவும் மழை அளவை பெற்றது. கடந்த 2014 ஆம் ஆண்டில் 43 செ.மீ மழை அளவை பெற்றது. இது சராசரி அளவை விட 2 சதவீதம் குறைவு என்றாலும் இது இயல்பு மழைதான்.
இந்த நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28 ஆம் தேதி தொடங்கியது. பருவமழை தொடங்கி நேற்றுடன் 17 நாட்கள் ஆகின்றன. இதுவரை தமிழகம் முழுவதும் சராசரியாக 32 செ.மீ மழை பெய்து உள்ளது. இந்த மழை அளவை வைத்து பார்க்கும் போது இந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட கூடுதலாக பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications