வடியாத வெள்ளம்... கண்ணீரில் தத்தளிக்கும் கடலூர் மக்கள்- அமைச்சர்கள் ஆய்வு

Subscribe to Oneindia Tamil

கடலூர்: காணும் இடமெங்கும் தண்ணீராக காட்சி அளிக்கிறது கடலூர் மாவட்டம். புயல் ஆடிய கோரத்தாண்டவத்தால் மரங்கள் சாய்ந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்த காரணத்தால் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். பொங்கி வந்த வெள்ளத்திற்கு வீடுகளை இழந்து, உடமைகளை இழந்து, ஆடுமாடுகள், கால்நடைகளை இழந்து தவிக்கின்றனர்.

வங்க கடலில் மையம் கொண்டிருந்த புயல் சின்னம் கடந்த 9ம்தேதி கடலூர் அருகே கரையை கடந்தது. புயல் சின்னம் காரணமாக ஏற்கனவே 2 நாட்கள் கடும் மழை பெய்திருந்தது. புயல் கரையை கடந்த போது மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் 35 செ.மீட்ட ருக்கு மேல் மழை பெய்தது. அதிகபட்சமாக நெய்வேலியில் 47 செ.மீட்டர் மழை பெய்தது.

கனமழை கடலூர் மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. பாலங்கள் உடைந்து சாலைகள் அடித்து செல்லப்பட்டதால் பொது மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். அதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் வெள்ளமாக ஓடினாலும் குடிக்க சுத்தமான தண்ணீர் இன்றி தவிக்கும் நிலைதான் ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் உணவு கிடைக்காமல் தவிக்கும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். 75 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பெருக்கெடுத்த வெள்ளம்

பெருக்கெடுத்த வெள்ளம்

கொட்டித்தீர்த்த கனமழையால் கடலூர் மாவட் டம் முழுவதும் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. கெடிலம் ஆறு, பரவனாறு மற்றும் ஓடைகளில் அதிக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தண்ணீர் ஊருக்குள் புகுந்தது.

நெய்வேலி சுரங்கத்தில் தண்ணீர்

நெய்வேலி சுரங்கத்தில் தண்ணீர்

நெய்வேலி என்.எல்.சி. சுரங்கங்களில் பெருமளவு மழைநீர் புகுந்திருந்தது. இதனால் மின் உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சுரங்கத்தில் உள்ள மழை நீரை ராட்சத மோட்டார்கள் மூலம் வெளியேற்றி அந்த நீர் பரவனாற்றில் விடப்பட்டது. இதன் காரணமாக வடலூர், குறிஞ்சிப்பாடி பகுதி கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது.

32பேர் பலி

32பேர் பலி

கடலூர் மாவட்டத்தில் மழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

மழைக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரணத் தொகை வழங்க முதல்வா ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, முதல்கட்டமாக 14 பேருக்கு தலா 4 லட்ச ரூபாய்க்கான காசோலையை வருமான வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.

மூழ்கிய விளைநிலங்கள்

மூழ்கிய விளைநிலங்கள்

வாழை, நெல், கரும்பு என சுமார் 75 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.பெரும்பாலும் பல கிராமங்களில் இன்னும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளதால் குடிநீர், உணவு கிடைக்காமல் பொது மக்கள் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

ரயில்பாதை துண்டிப்பு

ரயில்பாதை துண்டிப்பு

கன மழை காரணமாக கடலூர்- விருத்தாசலம் ரயில் பாதை தண்டவாளங்கள் கடும் சேதம் அடைந்துள்ளன. இதன் காரணமாக இந்த வழியாக செல்லும் காரைக்கால்- பெங்களூரு செல்லும் ரயில்கள் கடலூர்- விழுப்புரம் வழியாக மாற்றி விடப்பட்டுள்ளது. மேலும், கடலூர்- விருத்தாசலம் ரயில் பாதையில் தண்டவாளங்களின் அடிப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

சாலைகளில் வெள்ளம்

சாலைகளில் வெள்ளம்

சென்னை- கும்ப கோணம் சாலையில் வடலூர் அருகே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலை போக்குவரத்து துண்டிக்கப் பட்டது. கடலூர்- சிதம்பரம் சாலையில் ஆலப்பாக்கம், ஆல்பேட்டை ஆகிய இடங் களில் சாலையில் தண்ணீர் ஓடியது. இதனால் கடலூர்- சிதம் பரம் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. நேற்று ஓரளவு மழை குறைந்தது. இதனால் வெள்ளம் வடிய தொடங்கி உள்ளது. இதன் காரணமாக கடலூர், சிதம்பரம் சாலை யில் போக்குவரத்து அனுமதிக் கப்பட்டுள்ளது.

கிராமங்கள் துண்டிப்பு

கிராமங்கள் துண்டிப்பு

ஒரு சில இடங்களில் வெள்ளம் வடியத் தொடங்கியுள்ள நிலையில் 150க்கும் மேற்பட்ட கிராமங் களை தொடர்ந்து தண்ணீர் சூழ்ந்துள்ளது. இவற்றின் 34 கிராமங்கள் முற்றிலும் துண்டிக்கப் பட்டுள்ளன. அந்த கிராமங் களில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிக்கி தவிக்கிறார்கள். அவர்களை பத்திரமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெள்ளத்தில் சிக்கிய மக்கள் 28 ஆயிரம் பேர் ஆங்காங்கே உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

அமைச்சர்கள் ஆய்வு

அமைச்சர்கள் ஆய்வு

கடலூர் மாவட்ட வெள்ள சேத பணிகள் குறித்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா அவசர ஆலோசனை நடத்தி னார். அதைத்தொடர்ந்து அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், உதயகுமார், ஜெயபால் ஆகியோரை உடனடியாக கடலூ ருக்கு சென்று நிவரண பணி களை கவனிக்கும்படி உத்தர விட்டார்.

வெள்ள நிவாரண பணிகள்

வெள்ள நிவாரண பணிகள்

அமைச்சர்கள் இன்று காலை 10 மணிக்கு கடலூருக்கு வந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிவாரண பணிகள் தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் ஒவ்வொரு பகுதிகளுக்கும் அதிகாரி கள் குழுக்களை அனுப்பி தேவையான நடவடிக்கை களை எடுக்க உத்தரவிட்ட னர்.

அமைச்சர்கள் ஆய்வு

அமைச்சர்கள் ஆய்வு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி பகுதிகளை அமைச்சர்கள் பார்வை யிட்டனர். கடலூர் மாவட்ட அமைச்சரான எம்.சி. சம்பத் ஏற்கனவே கடலூர் பகுதி யிலேயே தங்கி இருந்து நிவாரண பணிகளை கவனித்து வந்தார். அவரும் அமைச்சர்களுடன் நிவாரண பணிகளை மேற்கொண் டார். ஏற்கனவே வருவாய்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கட லூர் பகுதியில் முகாமிட்டு நிவாரண பணிகளை செய்து வருகின்றனர். இப் போது வெளி மாவட்டங் களில் இருந்து மேலும் பல அதிகாரிகள் கடலூருக்கு வரவழைக் கப்பட்டுள்ளனர்.

உடனடி நடவடிக்கை தேவை

உடனடி நடவடிக்கை தேவை

வெள்ளம் படிப்படியாக வடிந்தாலும் பல இடங்களில் குடிநீர், உணவு உள்ளிட்டவை கிடைக்காததால் கடலூர் மாவட்ட மக்கள் கடுமையான சிக்கலை சந்தித்து வருகின்றனர். அடிப்படைத் தேவைகளை விரைந்து பூர்த்தி செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட முதல்வர் ஜெயலலிதா கடலூர் செல்வாரா? என்பதே எதிர்கட்சியினரின் கேள்வியாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+