‘அம்மா திட்டத்தின்’ மூலம் பெறப்பட்ட 33.14 லட்சம் மனுக்களுக்கும் 100 % தீர்வு: தமிழக அரசு பெருமிதம்
சென்னை: தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக அம்மா திட்டத்தின் கீழ் பெறப்பட்ட 33.14 லட்சம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டு, தீர்வு காணப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 24.2.2013 அன்று துவக்கப்பட்டது ‘அம்மா திட்டம்' (அனைத்து கிராமத்திலும் அடிதட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்கல் திட்டம்). சென்னை மாவட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களுக்கும் உட்பட்ட வட்டங்களில் சுழற்சி முறையில் செயல் படுத்தப்படுகிறது இத்திட்டம்.
இதன்படி, வருவாய் வட்டாச்சியர் தலைமையில் நடைபெறும் அம்மா திட்ட முகாம்களில் பட்டா மாறுதல், குடும்ப அட்டைகளில் திருத்தங்கள் உள்ளிட்ட மனுக்கள் அளிக்கலாம். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப் படும்.
இந்நிலையில், முதல்கட்டமாக அம்மா திட்டத்தின் கீழ் பெறப்பட்ட 33.14 லட்சம் மனுக்களுக்கும் நூறு சதவீத தீர்வு எட்டப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
வருவாய்த்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் எழிலகத்தில் வருவாய்க் கருத்தரங்க கூட்டத்தில் நேற்று நடந்தது. வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார்.
வருவாய்த்துறையின் முதல்கட்டமாக ‘அம்மா திட்டம்'. மாநிலம் முழுவதும் 32 மாவட்டங்களில் 16,671 கிராமங்களில் நடத்தப்பட்ட முகாம் கள் மூலம் 33.14 லட்சம் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் 100 சதவீதம் தீர்வு காணப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக நடைபெற்று வரும் அம்மா திட்டத்தின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் 7,135 கிராமங்களில் நடத்தப்பட்ட 6,621 முகாம்கள் மூலம் 6.68 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 4.37 லட்சம் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. குறிப்பாக, அரியலூர், நாகப்பட்டினம், ஊட்டி, தேனி, திருவாரூர், ஆகிய மாவட்டங்களில் 100 சதவீதம் தீர்வு காணப்பட்டுள்ளது.
கூட்டத்தில் வருவாய்த்துறைச் செயலர் ககன்தீப்சிங் பேடி, கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் தி.ஸ்ரீ.ஸ்ரீதர், சமூக பாதுகாப்புத் திட்டங்கள் ஆணையர் பிரதீப் யாதவ், பேரிடர் மேலாண்மை இணை ஆணையர் ஆர். லில்லி, தலைமைச் செயலக கூடுதல் செயலாளர்கள் ஏ.சையத் சதக்கத்துல்லா, டி.ஜெயகுமரன், மாவட்ட வருவாய் அலுவலர் சா.கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications