கூடங்குளத்தில் 35 மணிநேரத்தில், 35 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி
Subscribe to Oneindia Tamil
நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இதுவரை, 35 மணி நேரத்தில் 35 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அணு மின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடங்குளம் முதலாவது அணுஉலையில் தற்போது 425 மெகாவாட் வீதம் மின்உற்பத்தி நடக்கிறது. இதுவரை ஆயிரத்து 35 மணிநேரத்தில், மொத்தம் 35 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து தொகுப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டர்பைனுக்கு செல்லும் நீராவியை வெளியேற்றும் சோதனை இந்த வாரத்தில் நடக்கவுள்ளது. இச்சோதனையின் போது, சத்தத்தின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனினும் பொதுமக்களுக்கோ, சுற்றுச்சூழலுக்கோ இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications