ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: வாக்களிக்க பணம் கொடுத்த 4 அதிமுகவினர் கைது
திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு வாக்களிக்க பணம் கொடுத்த அதிமுகவினர் நால்வரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்கள் காலை முதலே வரிசையில் நின்று தங்களின் வாக்குகளை தீவிரமாக பதிவு செய்து வருகின்றனர்.

தீவிர கண்காணிப்பு
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 322 வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு வீடியோவில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் வாக்குப்பதிவைக் கண்காணிக்க தேர்தல் ஆணையம் சார்பில் சிறப்பு பார்வையாளர் அனில்குமார் ஜா, பொதுப் பார்வையாளர் பல்கார் சிங், செலவினப் பார்வையாளர் ஸ்ரீதர் தோரா, சட்டம் ஒழுங்கு பார்வையாளர் வினோத்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் கே.எஸ்.பழனிசாமி, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் டி.ஜி.வினய் மற்றும் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் காதர் மொய்தீன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
பணப்பட்டுவாடா
இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி பெருகமணி பகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவடா செய்ய ஒரு வீட்டில் பதுங்கியிருந்த நான்கு அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications