நடுரோட்டில் கேக் வெட்டிய 4 பேர்.. நடந்து சென்ற மாணவியின் கன்னத்தில் கேக் தடவி அட்டூழியம்
கோவை: கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் சாலையில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 4 பேர் அவ்வழியாக சென்ற 15 வயது சிறுமியின் மீது வலுக்கட்டாயமாக கேக் தடவிய போது கண்டித்ததால் அந்த 4 பேரும் சேர்ந்து மாணவியை சரமாரியாக அடித்துள்ளனர். இதையடுத்து மாணவியின் புகாரின் பேரில் அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
வீட்டுக்குள் கேக் வெட்டினார்கள், பின்னர் திருமண மண்டபங்கள், கல்லூரிகள்,பள்ளிகளில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடுவது, கடற்கரைகள், ரிசார்ட்கள், ரெஸ்டாரென்ட்கள் உள்ளிட்டவற்றில் பிறந்தநாளை கொண்டாடுவது என இளைஞர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

இன்னும் சிலர் சாலைகளில் கேக் வெட்டி கொண்டாடுவது, அரிவாளால் கேக் வெட்டுவது, தேவையில்லாமல் அவ்வழியே வருவோர் போவோரை வம்புழுக்கு இழுப்பது போன்ற செயல்களை செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் கோவையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ஆறுமுக கவுண்டர் வீதியில் உள்ள பழனி ஆண்டவர் கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நடுரோட்டில் சிலர் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினர்.

அப்போது அந்த மாணவியின் கன்னத்தில் கேக்கை தடவியுள்ளனர். இதனால் கோபமடைந்த அந்த மாணவி, அவர்களின் செயலை கண்டித்து தடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த 4 பேரும் சேர்ந்து மாணவியை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவி குனியமுத்தூர் போலீஸில் புகார் செய்தார்.
இதையடுத்து உதவி ஆய்வாளர் முருகன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது சாலையில் பிறந்தநாள் கொண்டாடி சிறுமியிடம் வம்பு செய்ததாக அதே பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (21), சஞ்சீவி (19), சந்தோஷ் (20), 16 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தார். இவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், மானபங்க முயற்சி உட்பட 4 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications