கோவை: கேஸ் கசிவினால் வெடி விபத்து: 4 பட்டாசு தொழிலாளர்கள் பலி; 10 பேர் காயம்
கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே கேஸ் கசிவில் ஏற்பட்ட வெடி விபத்தில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
கோவை மாவட்டம் அங்கலக்குறிச்சி அருகே இன்று 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எந்தவித அனுமதியும் இன்றி பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அருகில் உள்ள வீட்டில் இருந்த சிலிண்டரில் கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த கேஸ் கசிவு பட்டாசு தயாரிக்கும் இடத்திற்கும் பரவியுள்ளது.
அப்போது, மருந்துகள் ஒன்றோடு ஒன்று உரசின, இதில் பட்டாசுகள் வெடித்து சிதறியது. எதிர்பாரமல் ஏற்பட்ட இந்த விபத்தில் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்கள். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தவர். அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த வெடி விபத்தில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அனுமதியின்றி பட்டாசு தயாரித்தபோது விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications