சாத்தூர் அருகே விபத்தில் 4 பேர் பலி.. துக்க வீட்டிற்கு காரில் சென்ற போது சோகம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நல்லி சத்திரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் உயரிழந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த ரகுமான் என்வரின் மனைவி சிந்து குமாரி(42). இவர் கோவையில் துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளவதற்காக, தனது உறவினர்களுடன் காரில் சென்று கொண்டிந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நல்லி சத்திரம் அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் இருந்த பாலத்தின் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் இருந்த சிந்துகுமாரி, சதீஷ், ஜெயஸ்ரீ, கார் ஓட்டுனர் பிஜு ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த ஸ்ரீஜா, கிருஷ்ண குமார், சுகாசினி, அரவிந்த், ராம பத்திரன் ஆகிய 5 பேரும் சிகிச்சைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications