குவஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வைத்தது 4 பேர் கொண்ட கும்பல்?
சென்னை: சென்னைக்கு வந்த குவஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டை வெடிக்கச் செய்த சதித் திட்டத்தில் நான்கு பேருக்குத் தொடர்பு இருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த நான்கு பேர் கொண்ட கும்பல்தான் வெடிகுண்டுகளை வைத்து அதை வெடிக்கவும் செய்தது என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இரட்டை குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களை கண்டறிவதற்கான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூர் அல்லது சென்னையில் ரயில் நின்றபோதே வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இரு ரயில் நிலையங்களிலும் உள்ள சிசிடிவி மேரராவில் பதிவான காட்சிகளை போலீஸார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் குண்டுவெடிப்பு நடந்த இரு பெட்டிகளிலும் தலா இருவர் மர்ம பையுடன் ஏறியது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் 4 பேரும் குண்டு வைத்திருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்துள்ள போலீஸார் அவர்கள் யார் என்பதை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
நான்கு பேரும் சென்னையில் கைதான பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேனின் கூட்டாளிகளா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இவர்கள் நான்கு பேர் யார் என்ற அடையாளம் தெரிந்தால் குண்டு வெடிப்பு சம்பவத்தில் குழப்பம் சற்று தீரும் என்று கருதப்படுவதால் இந்த கோணத்தில் தற்போது போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.--
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications