4 மாத கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொலை செய்த கணவர் கைது
குடும்பத் தகராறில் கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
சீர்காழி: சீர்காழி அருகே கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன். இவர் நாகை மாவட்டம் திருப்பங்கூரை சேர்ந்த தேவி என்பவரை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். திருமணம் நடந்த முதல் மாதத்திலிருந்தே இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், சரவணன் தன் மனைவி தேவியிடம், அவரது பெற்றோரிடமிருந்து பணம் வாங்கி வருமாறு வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும், இதனால் கணவன் - மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நான்கு மாத கர்ப்பிணியான தேவி, கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவனின் தொந்தரவு தாங்க முடியாமல் பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார். இதனால், சரவணன் திருப்பங்கூருக்கு வந்து தேவியை வீட்டுக்கு வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளார்.
இதற்கு தேவி மறுப்பு தெரிவித்துள்ளார். இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த சரவணன் தேவியின் தலையின் பின்புறத்தில் அடித்துள்ளார். இதில், தேவி வீட்டின் சுவற்றில் மோதி பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த தேவியின் பெற்றோர், வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து தேவியின் கணவர் சரவணனை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications