தருமபுரி மருத்துவமனையில் மேலும் 4 குழந்தைகள் உயிரிழப்பு! 3 நாட்களில் 10 குழந்தைகள் பலி!!

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்தப் பிரிவில், பச்சிளம் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல், ஒவ்வாமை, மஞ்சள் காமாலை, குறை பிரசவம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சிகிச்சைப் பிரிவில் வெவ்வேறு நாள்களில் அனுமதிக்கப்பட்ட 6 பச்சிளம் குழந்தைகள் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை அடுத்தடுத்து உயிரிழந்தன. இதனால் பெற்றோர், பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த மருத்துவமனை நிர்வாகம், 3 குழந்தைகள் எடைக் குறைவு காரணமாகவும், 2 குழந்தைகள் மூச்சுத் திணறல் காரணமாகவும் இறந்தன. அரசு மருத்துவமனைக்கு வரும் பச்சிளம் குழந்தைகளுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, இறப்புக்கு காரணம் மருத்துவக் குறைபாடு அல்ல என்று தெரிவித்தது.
இதனிடையே குழந்தைகள் இறப்பு தொடர்பாக சென்னை குழந்தைகள் நல மைய மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.சீனிவாசன் நேற்று தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆய்வு நடத்தினார்.
இந்த மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் மொத்தம் 80 பச்சிளம் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று மேலும் 4 குழந்தைகள் உயிரிழந்திருப்பது பெற்றோரை பீதிக்குள்ளாக்கியுள்ளது.
குழந்தைகளின் உடல்நலனை மருத்துவர்கள் குறை கூறினாலும் தேவையான மருத்துவ உபகரணங்கள் இல்லாததே குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications