விழுப்புரம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து: குழந்தை உள்பட 4 பேர் பலி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டி அருகே லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் குழந்தை உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை அடுத்த கெருகம்பாக்கத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (40). லாரி டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார். இந்நிலையில் ராமநாதபுரம் அருகே கோவிலுக்குச் சென்றுவிட்டு நேற்று அதிகாலை குடும்பத்துடன் காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது விக்கிரவாண்டி டோல்கேட் அருகே கன்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுந்தர்ராஜ், அவரது மனைவி மகாலட்சுமி, டிரைவர் பழனி, குழந்தை மதுமிதா ஆகிய 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.












Click it and Unblock the Notifications