கொடநாடு பங்களாவில் ஜெ.,வின் கைக்கடிகாரங்கள் கொள்ளை: மாவட்ட எஸ்.பி., தகவல்
கொடநாடு பங்களாவில் ஜெயலலிதா சசிகலா பயன்படுத்திய 3 அறைகளில் கொள்ளை நடைபெற்றுள்ளதாக நீலகிரி எஸ்பி முரளி ரம்பா தெரிவித்துள்ளார்.
நீலகிரி: கொடநாடு பங்களாவில் ஜெயலலிதாவின் அறையில் இருந்த 5 கைக்கடிகாரங்களை கொள்ளையர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளதாக நீலகிரி மாவட்ட எஸ்பி முரளி ரம்பா கூறியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 23ம் தேதி நள்ளிரவில் காவலாளி ஓம்பகதூர் என்பவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு குறித்து நீலகிரி எஸ்.பி. முரளி ரம்பா செய்தியாளர்களிடம் கூறுகையில், கொடநாடு பங்களாவில் அதிக அளவில் பணம் இருப்பதாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் கொள்ளையர்களிடம் கூறியுள்ளார். பங்களாவில் மோப்ப நாய், சிசிடிவி கேமரா இல்லை எனவும் அவர் கொள்ளையர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலி பதிவெண் கொண்ட 3 கார்களை பயன்படுத்தி எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்துள்ளனர். அப்போது எட்டாவது கேட்டில் இருந்த ஓம் பகதூரை கொலை செய்துவிட்டு பங்களாவிற்குள் சென்ற கொள்ளையர்கள், ஜெயலலிதாவின் அறை கதவு, ஜன்னல்களை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அங்கு பணம் எதுவும் கிடைக்காததால் ஜெயயலிதா மற்றும் சசிகலா பயன்படுத்திய 5 கைக்கடிகாரங்கள், 5 கிரிஸ்டல் அலங்காரப் பொருட்களை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications