ஜெ. வீட்டில் சசிகலாவுக்கு எத்தனை "அறை" கிடைத்தது தெரியுமா?
போயஸ் கார்டனில் சசிகலாவுக்கு 4 அறைகள் இருந்தது வருமான வரித்துறை சோதனையில் தெரிய வந்துள்ளது.
Recommended Video

சென்னை: சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா வசித்த வீட்டில் அவரது ஆருயிர்த் தோழி சசிகலாவுக்கு 4 அறைகள் இருந்தது தெரிய வந்துள்ளது.
சசிகலாவின் உறவினர்கள் வீடுகளில் கடந்த வாரம் வருமான வரித் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். இதைத் தொடர்ந்து சசிகலா தங்கியிருந்த போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை நடைபெற்றது.
இந்த ரெய்டு குறித்து வருமான வரித்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். அதில் போயஸ் கார்டனில் சசிகலாவின் 4 அறைகளிலும் சோதனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த செய்தியை கேட்டதுமே நமக்கு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு கிடைத்த சொகுசுகள்தான் நினைவுக்கு வருகின்றன.

சிறையில் சசிகலா
சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததால் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன
சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருந்ததால் அவருக்கு சிறையில் சில சலுகைகள் வழங்கப்பட்டது. அதாவது டிவி, சேர்கள், பேன், கட்டில் உள்ளிட்டவைகளாகும்.

சிறையில் சொகுசு வாழ்க்கை
இந்நிலையில் சிறையில் உள்ள சசிகலாவுக்கு தனி சமையலறை உள்பட 5 அறைகள் இருந்ததாக சிறைத் துறை டிஐஜியாக இருந்த ரூபா பல்வேறு தகவல்களை அம்பலப்படுத்தினார்.

மக்கள் ஒப்பீடு
ஆனால் போயஸ் கார்டனைப் போலவே சிறையையும் தனது வீடு போல மாற்றியிருக்கிறார் சசிகலா என்பது இப்போதுதான் புரிய வருகிறது. சீதை இருக்குமிடம் அயோத்தி என்பார்கள்.. சசிகலா இருக்குமிடத்தில் அவருக்கு 4 அறைகள் இருக்கும் என்பது புது மொழியாகியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications