4 வயது சிறுமியிடம் சில்மிஷம்: பிளஸ் 1 மாணவனுக்கு தர்ம அடி
குமரி: பேச்சிப்பாறையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிளஸ் 1 மாணவரை பொதுமக்கள் பிடித்து அடித்து நொறுக்கினர்.
குமரி மாவட்டம் குலசேகரத்தை அடுத்த பேச்சிப்பாறை பகுதியின் மலையடிவாரத்தில் உள்ள குடியிருப்பில் முருகன்-ரேவதி (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) என்ற தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. அக்கம்பக்கத்தினர் அந்த குழந்தையை கொஞ்சி மகிழ்வது வழக்கம்.

பக்கத்து வீட்டில் குடியிருந்த பிளஸ்-1 மாணவர் ஒருவரும் அந்த சிறுமியிடம் அன்பாக பழகி வந்தார். 2 நாட்களுக்கு முன்பு மாலை நேரத்தில் வீட்டுக்கு வெளியே சிறுமியுடன் பிளஸ்-1 மாணவர் விளையாடிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் சிறுமியின் அழுகுரல் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் பதறிய பெற்றோர் உடனே வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தனர். அங்கு சிறுமியை காணவில்லை. அழுகுரல் மட்டும் தொடர்ந்து கேட்டபடி இருந்தது.
பதறிப்போன பெற்றோர் சிறுமியை அங்குமிங்கும் தேடினர். அப்போது வீட்டுக்கு பின்புறம் ஒதுக்குப்புறமான இடத்தில் சிறுமிக்கு பிளஸ்-1 மாணவன் பாலியல் தொல்லை கொடுப்பதை கண்டனர். அதிர்ந்து போன அவர்கள் எழுப்பிய சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்தனர். அவர்கள் மாணவனை கையும் களவுமாக பிடித்து சரமாரியாக அடித்தனர்.
பின்னர் அவரை பேச்சிப்பாறை போலீசில் ஒப்படைத்தனர். போலீசாரிடம் சிறுமியின் பெற்றோர் புகாரும் கொடுத்தனர். அதனை பெற்றுக் கொண்ட போலீசார் அந்த சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கிடையே மாணவன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஊர் மக்கள் பலரும் காவல் நிலையம் முன்பு திரண்டு கோஷமிட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications