For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காயல்பட்டினத்தில் மூதாட்டி வீட்டில் 40 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் திருட்டு.. வேலைக்கார பெண் கைது

நகை, பணம் திருடிய வீட்டு வேலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஐடி ஊழியர் வீட்டில்.. 110 சவரன் அபேஸ்! | மூதாட்டி வீட்டில் 40 பவுன் திருட்டு- வீடியோ

    ஆறுமுகநேரி: காயல்பட்டனத்தை சேர்ந்தவர் பாத்திமுத்து வயது 78. கணவனை இழந்த இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். வெளிநாட்டில் நகைக்கடை நடத்தி வருவதால், பாத்திமுத்து தனது சகோதரர் கப்பார் என்பவருடன் வசித்து வந்தார்.

    மேலும் வீட்டு வேலைகளை கவனிக்க கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த அதே பகுதியை சேர்ந்த கதிஜா என்பவரை வேலைக்கு வைத்து கொண்டார் கதிஜாவுக்கு இரவு 8 மணியிலிருந்து காலை 8 மணி வரை வேலை. தன் குடும்பத்தில் ஒருத்தியாக பாத்திமுத்துவும் கதிஜாவை கவனித்து கொண்டார்.

    40 Sovereign jewelery, 2 lakh cash stolen in Kayalpatinam

    இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வேலையை முடித்து கதிஜா சென்றபின்பு, பாத்திமுத்து, தனது பீரோவை திறந்து பார்த்தபோது, அங்கு சில நகைகள் இல்லாததால் இல்லை. அதனால் தனது மகன்கள், அப்பகுதியிலுள்ள வேறு சில உறவினர்களிடம் விசாரித்து பார்த்தார். சரியான பதில் கிடைக்கவில்லை. மீண்டும் பீரோவினுள் சென்று எவ்வளவு நகைகள் மொத்தமாக காணாமல் போனது என பாத்திமுத்து கணக்கெடுத்தார்.

    அப்போது, 40 பவுன் நகைகளும், 2 லட்சம் ரூபாய் ரொக்கமும் கொள்ளைபோனது தெரியவந்ததும் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது தொடர்பாகஆறுமுகநேரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது முதல் சந்தேகமே கதிஜா மீதுதான் விழுந்ததால் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

    அதில், நகைகளை தான்தான் திருடியதாகவும், அந்த நகைகள் அனைத்தையும் வங்கி லாக்கரில் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். பின்னர் அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    English summary
    40 Sovereign jewelery, 2 lakh cash stolen in Kayalpatinam, Police arrested the maid and investigated.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X