"அம்மா" இல்லை... அழுது வடிந்த சுற்றுலா பொருட்காட்சி!
சென்னை: சென்னையில் தொடங்கிய 41வது சுர்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியின் தொடக்க விழா சோபிக்கவில்லை. மாறாக கூட்டமே இல்லாமல் அழுது வடிந்தது.
ஜெயலலிதா முதல்வராக இல்லாத நிலையில் இந்த பொருட்காட்சி நடப்பதால், கூட்டம் சேராமல் அரசுத் தரப்பே பார்த்துக் கொண்டதோ என்று சந்தேகப்படும் அளவுக்கு ஆட்களின் தலையே இல்லாமல் மிகக் குறைவான நபர்களே வந்திருந்தனர்.
சென்னையில் வருடா வருடம், தமிழக அரசின் சார்பில் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நடைபெறும். இந்த ஆண்டு 41வது சுற்றுலா பொருட்காட்சி தொடங்கியுள்ளது. தீவுத் திடலில் இது நடைபெறுகிறது.
இதற்கான நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ. 20 என்றும், சிறார்களுக்கு ரூ. 10 என்றும் நிர்ணயித்துள்ளனர்.

அரசுத் துறை சாதனை விளக்க அரங்குகள்
இந்தப் பொருட்காட்சியில் அரசுத் துறை சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை ரூ.86.5 லட்சம் செலவில் அமைத்துள்ளனர்.

தொடங்கி வைத்த வளர்மதி
இந்த பொருட்காட்சியை ஜனவரி 3ம் தேதி அமைச்சர் வளர்மதி தொடங்கி வைத்தார்.

50 அரங்குகள்
சுற்றுலா பொருட்காட்சியில் அரசுத் துறைகளுக்கு 50 அரங்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 120 சிறிய தனியார் கடைகளும், 50 தனியார் பெரிய கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. பொழுதுபோக்கு பூங்காவும் நிறுவப்பட்டுள்ளது.

70 நாட்களுக்கு
இந்த சுற்றுலா பொருட்காட்சி 70 நாட்களுக்கு நடத்தப்படும்.

அமர்நாத் பனிலிங்கம்
பொருட்காட்சியின் சிறப்பாக, பனி லிங்கம் புகழ் அமர்நாத் குகைக் கோவிலை தத்ரூபமாக அரசு அமைந்துள்ளது. எனவே அமர்நாத் பனி லிங்கத்தை பக்தர்கள் சென்னையிலேயே தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்துக் கோவில்கள் மயம்
மேலும் அமர்நாத் கோவில் அமைந்துள்ள பகுதிகளில் பல இந்துக் கடவுள்களின் சிலைகளும் வைக்கப்படவுள்ளன. கோவிலுக்குள் செல்வதற்கு முன்பு கை, கால்களை சுத்தப்படுத்திக் கொள்வதற்காக நீர்த் தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்பெஷல் பஸ்கள்
புறநகரில் இருந்து மக்கள் தீவுத்திடலுக்கு வருவதற்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கூட்டம் இல்லை
தொடக்க விழாவின்போது விரல் விட்டு எண்ணி விடும் அளவிலேயே கூட்டம் காணப்பட்டது. கூட்டம் சேர்க்க அரசுத் தரப்பிலும் ஆர்வம் காட்டவில்லை போலும். "அம்மா"வே ஆட்சியில் இல்லை. பிறகெதற்கு கூட்டம், ஆடம்பரம் என்று அடக்கி வாசித்து விட்டார்கள் போல.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications