தீபாவளி முடிந்து திரும்பும் மக்களுக்காக 4300 சிறப்பு பஸ்கள்.. நேற்று முதல் விறுவிறு இயக்கம்!
சென்னை: தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடி விட்டு சென்னை திரும்பும் மக்களின் வசதிக்காக, 4300 சிறப்புப் பேருந்துகள் நேற்று முதல் இயங்கத் தொடங்கியுள்ளன.
இந்த சிறப்புப் பேருந்துகள் மிகவும் வசதியாக இருப்பதாக மக்கள் அரசுக்கும், போக்குவரத்துக் கழகங்களுக்கும் நன்றி கூறியுள்ளனர்.
நேற்று முதல் நவம்பர் 5ம் தேதி வரை இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தீபாவளிக்காக 8350 சிறப்புப் பேருந்துகள்
தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கும் மக்கள் போவதற்காக அரசு சார்பில் 8350 சிறப்புப் பேருந்துகளை இயக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

அக் 29 முதல் நவ. 1 வரை 4050 பேருந்துகள்
அதன்படி அக்டோபர் 29ம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதி வரை சென்னையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் 4050 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

சென்னைக்குத் திரும்பி வர 4300 பேருந்துகள்
அதேபோல சென்னைக்குத் திரும்பி வருவதற்காக தற்போது பல்வேறு ஊர்களிலிருந்து 4300 சிறப்புப் பேருந்துகளை அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இயக்குகின்றன. இந்த பேருந்துகள், நேற்றிலிருந்து இயங்கி வருகின்றன. நவம்பர் 5ம் தேதி வரை இவை இயக்கப்படும்.

குமரி முதல் சென்னை வரை மக்கள் குஷி
இந்த சிறப்புப் பேருந்துகளால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை தீபாவளிக்காக பஸ்கள நாடிய அத்தனை பேரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று கூடுதல் சிறப்புப் பேருந்துகள்
இன்று அதிக அளவிலானோர் சென்னைக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதிக அளவிலான சிறப்புப் பேருந்துகள் இன்று இயக்கப்படுகின்றன. மாலை முதலே இவை இயக்கப்படவுள்ளன.

சென்னையிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள்
அதேபோல தீபாவளியை சென்னையில் கொண்டாடுவதற்காக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் தென் மாவட்டங்களிலிருந்து வந்தவர்கள் திரும்புவதற்கு வசதியாக இங்கிருந்தும் இன்று ஏராளமான சிறப்புப் பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சந்தோஷ பயணம்
சிறப்புப் பேருந்துகள் பெருமளவில் விடப்பட்டதால் மக்கள் நிம்மதியாக ஊர்களுக்குப் போய் தீபாவளியைக் கொண்டாட முடிந்ததாக சிறப்புப் பேருந்துகளைப் பயன்படுத்தியோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஆம்னி தொல்லையிலிருந்து தப்பினோம்
பலர், இதுவரை பண்டிகைகளுக்கு முதல் நாள் ஆம்னி பேருந்துகளை நம்பி பெரும் பணத்தைக் கொட்டி அழுது வந்தோம். ஆனால் சமீப காலமாக தமிழக அரசே நிறைய சிறப்புப் பேருந்துகளை விட்டு வருவதால் இந்த ஆம்னி பேருந்துத் தொல்லையிலிருந்து பெரிய அளவில் தப்பியுள்ளோம் என்றும் மக்கள் மலர்ச்சியுடன் கூறுவதைக் காண முடிந்தது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications