சசிகலாவுக்கு 49 அதிமுக எம்பிக்கள் ஆதரவு- அதிமுக தலைமையை ஏற்க நேரில் வலியுறுத்தல்
சசிகலாவுக்கு அதிமுகவின் 49 எம்பிக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 49 எம்பிக்களும் சசிகலாவை நேரில் சந்தித்து அதிமுக பொதுச்செயலராக வலியுறுத்தினர்.
சென்னை: சசிகலாவுக்கு 49 அதிமுக எம்பி.க்கள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். 49 எம்பிக்களும் சசிகலாவை நேரில் சந்தித்து அதிமுக தலைமையை ஏற்க வலியுறுத்தினர்.
அதிமுக தலைமையை சசிகலா ஏற்க வலியுறுத்தி நாள்தோறும் போயஸ்கார்டனுக்கு அதிமுக நிர்வாகிகள் படையெடுத்து வருகின்றனர். இருந்தபோதும் அக்கட்சி தொண்டர்களால் இதை ஏற்க முடியாமல் உள்ளனர்.

இதனிடையே போயஸ் கார்டனுக்கு நேற்று அதிமுகவின் 49 எம்.பிக்களும் ஒன்றாக தம்பிதுரை தலைமையில் ஆஜராகினர். நாடாளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சியாக திகழும் அதிமுகவுக்கு மொத்தம் 50 எம்பிக்கள் உள்ளனர். இவர்களில் சசிகலா புஷ்பா கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.
சசிகலா புஷ்பாவை தவிர 49 எம்.பிக்களும் சசிகலாவை நேரில் சந்தித்து அதிமுகவின் தலைமையை ஏற்க வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்பிக்கள் பலரும், ஜெயலலிதாவைத் தொடர்ந்து சின்னம்மா சசிகலாவே அதிமுக தலைமையை ஏற்க தகுதியானவர் என தெரிவித்தனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications