திருவள்ளூரில் 5 குழந்தைகள் கடத்தல்- தப்பி வந்த சிறுமியால் அனைவரும் மீட்பு
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பம் கிராமத்தில் ஐஸ் வாங்கித் தருவதாக கூறி மர்ம நபர் ஒருவர் ஐந்து குழந்தைகளை கடத்தியுள்ளார்.கடத்தப்பட்ட குழந்தைகளில் தப்பித்து வந்த ஒரு சிறுமி கொடுத்த தகவலின் பேரில் மற்றவர்கள் மீட்கப்பட்டனர்.
பள்ளிப்பட்டு தாலுகா அம்மையார்குப்பம் இந்திரா நகர் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் சக்தி , 9, புன்னகை,7, பிரியா,4, மோகன்,7, தேவி,5. இவர்கள் நேற்று மதியம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் அங்கு வந்து அவர்களுக்கு ஐஸ் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறினார். இதை உண்மை என்று நம்பிய சிறுமிகள் மற்றும் சிறுவன் அவரை பின்தொடர்ந்து சென்றனர்.
சற்று தூரம் சென்றதும் சிறுமி சக்தி அவரிடம் இருந்து தப்பி வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். நடந்த விவரத்தை தனது தந்தை வரதராஜனிடம் இதுபற்றி தெரிவித்தாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த வரதராஜன் கடத்தப்பட்ட சிறுமி புன்னகையின் தந்தை ரவியை அழைத்துக்கொண்டு ஆளுக்கொரு புறமாக தேடினர்.
அம்மையார்குப்பத்தை அடுத்த கொங்காமுடி மலை அருகே ரவி தேடிச் சென்றபோது சிறுமிகள் மற்றும் சிறுவனுடன் மர்மநபர் சென்று கொண்டிருந்தார். ரவியை பார்த்ததும் மர்மநபர் தப்பி ஓடி விட்டார்.
ரவி கடத்தப்பட்ட 4 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார். இந்த தகவல் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் கிடைத்ததும் ஆர்.கே.பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரணை மேற்கொண்டனர். தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றனர். குழந்தைகள் கடத்தப்பட்டு மீட்கப்பட்ட சம்பவம் அம்மையார் குப்பத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications