அமெரிக்க கப்பல்: 3 மாலுமிகளுக்கு 5 நாள் போலீஸ் காவல்
தூத்துக்குடி: தூத்துக்குடி கடல் பகுதியில் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்கக் கப்பலில் இருந்த 3 மாலுமிகளை 5 நாட்கள் போலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.
இந்திய கடல் எல்லையில் பிடிபட்ட அமெரிக்க கப்பலின் பாதுகாவலர்கள் மற்றும் கப்பல் மாலுமிகள் உள்ளிட்ட 33பேர் கடந்த 18ம் தேதி அன்று கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் கப்பலின் பராமரிப்பு பணிக்காக கப்பலின் கேப்டன் டட்னிக் வேலன்டைன் மற்றும் தலைமை பொறியாளர் சிகோரென்டொ வெலரி ஆகியோர் கப்பலில் இருந்தனர். இவர்களில் கப்பல்கேப்டன் தற்கொலைக்கு முயன்றதை அடுத்து இருவரையும் க்யூ பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை தூதரக அதிகாரிகள் சந்தித்து பேசிய நிலையில், பிடிபட்டவர்களில் 22பேர் சென்னை புழல் சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அமெரிக்க ஆயுத கப்பல் விவகாரத்தினை கியூ.பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்க கப்பலை சேர்ந்த பால்டேவிட் டெர்மிடவர்(இங்கிலாந்து), மற்றும் இந்தியாவை சேர்ந்த லலித்குமார் குராங், ராஜேஷ்வர் திவேதி ஆகியோரை க்யூ பிரிவு காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இன்று நீதிபதி கதிரவன் முன் விசாரணைக்கு வந்தது. இதில் மூன்று பேரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார். திங்கள் கிழமை ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications