ராமநாதபுரம் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து- 3 கல்லூரி மாணவிகள் உட்பட 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே தனியார் பேருந்தும், மினி டெம்போ ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், தனியார் விபத்து கவிழ்ந்தது. இதில், பேருந்தில் பயணம் செய்த பரமக்குடி அரசுக் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் லட்சுமி, கவுசல்யா, வினோதினி உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
மேலும், இந்த விபத்தில் காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications