தமிழகத்தில் ஒரே நாளில் 8 விவசாயிகள் மரணம் - 3 நாட்களில் 29 விவசாயிகள் பலி
தமிழகத்தில் ஒரே நாளில் 8 விவசாயிகள் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 3 நாட்களில் மட்டும் 29 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
தஞ்சாவூர்: பருவமழை பொய்த்துப்போனதால் விவசாயிகள் பயிரிட்ட நெற்பயிர்களும், மஞ்சள் பயிர்களும் கருகியதால் விவசாயிகள் விஷம் குடித்தும், தூக்குப் போட்டும் உயிரை மாய்த்துக்கொண்டு வருகின்றனர். இதனிடையே தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 8 விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர். கடந்த 3 நாட்களில் 29 விவசாயிகள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஊருக்கே உணவு படைக்கும் உழவர்கள் வாழ்வதற்கு வழியின்றி தொடர்ச்சியாக மரணத்தை தழுவுவது ஒட்டுமொத்த நாட்டுக்கும் தலைகுனிவு. தமிழகத்தில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 2500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறது புள்ளிவிபரம்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதால் அதிர்ச்சியில் விவசாயிகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. பெரும்பாலான தற்கொலைகளுக்கு கடன் சுமைதான் காரணம் என்பதே உண்மை.
கடலூர் மாவட்டம் ஆழங்காத்தான் கிராமத்தில் விவசாயி செந்தமிழன் மாரடைப்பால் உயிரிழந்தார். நாகை மாவட்டம் அறுபதாம்கட்டளையில் விவசாயி தம்புசாமி மாரடைப்பால் உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம் புத்தகலூர் கிராமத்தில் விவசாயி வடமலை மாரடைப்பால் உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டம் செல்லங்குப்பத்தில் விவசாயி மண்ணு நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் கழுதி அருகே வாகைகுளத்தில் விவசாயி அழகர்சாமி, பயிர்கள் கருகிய அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார்.
கடலூர் மாவட்டம் ஆலங்காத்தான் பகுதியைச் சேர்ந்த செந்தமிழ் என்ற விவசாயி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். திருவாரூர் மாவட்டம் பாண்டுகுடியில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் இரண்டு விவசாயிகள் உயிரிழந்துள்ளது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் விவசாயி முருகன், நெற்பயிர் கருகியதால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் உயிரிழந்த விவசாயிகள் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 71 விவசாயிகள் பலியாகியுள்ளனர் என்பதுதான் உச்சக்கட்ட சோகம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications